Wednesday 8 October 2014

மாந்திரீகத்தில் சிறந்தது எது ?

பொதுவாகவே மாந்திரீகத்தில் பல தேவதைகளின் உபாசனை முறைகள் கொடுக்கிறார்கள் .ஒவ்வொரு வேலைகளுக்கும் ஒவ்வொரு தேவதைகளை சித்தி செய்து  வைத்து நாம் காரியங்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது .அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு யந்திரம் மந்திரம் அப்படி இருக்கிறது .


திரு முத்துபாண்டி வைத்தியருடைய தாத்தாவிற்கு எழுத படிக்க தெரியாது ஆனால் அவரும் ஒரு பெரிய மாந்திரிகராகத்தான் இருந்தார் .அவருக்கு கனவில் ஒரு தேவதை வந்து இரவு முழுவதும் நாம் இருவர் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதை போலவே அவரிடம் அந்த தேவதை பேசிக்கொண்டே இருக்கும் இவர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லும் .இவரும் பெரிய சித்த வைத்தியர் ஜோதிடர் மாந்திரீகர்தான் .ஆக மாந்திரீகம் பயில்வதற்கு கல்வி தேவையில்லை கேள்வி ஞானமே போதுமானது .  

எந்த தேவதையை சித்தி செய்யலாம் ?

அப்படியில்லாமல் சிறு தெய்வங்களை சித்தி செய்வதை விட்டு விட்டு பெரிய தெய்வங்களான வாலை திரிபுரசுந்தரி ,காளி ,அஷ்ட லக்ஷ்மி ,விநாயகர்,அனுமன்,வராகி.இப்படி போன்ற தெய்வங்களை சித்தி செய்து வைத்து கொண்டால் நாம் ஒரு விஷயம் செய்யும் பொது அதற்காக அதிகம் முயற்சி செய்ய வேண்டியதில்லை 

நாம் பூஜையில் அமர்ந்திருக்கும் பொது இன்னான் மகன் இன்னனுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் போதும் அந்த நிகழ்வானது ஏழு அல்லது பதினோரு நாட்களுக்குள் நடந்து விடும் .அதற்காக எந்திரங்கள் எழுதி 41நாட்கள் பூஜை வைத்து செய்ய வேண்டும் என அவசியம் இல்லை .

இதில் முக்கியமானது என்ன வென்றால் நாம் வணங்கும் தெய்வத்தை இப்படிபட்ட வேலைக்கெல்லாம் பயன்படுத்தினால் நமக்குத்தான் பாவங்கள் அதிகம் ஆகும் .

அந்த தெய்வத்திற்கு ஒரு லக்ஷ்திற்கு பத்து லக்ஷம் மந்திரம் கூறினால் நமக்கு எல்லா பிறவிகளிலும் அந்த தேவதையின் அருள் கிடைக்கும்.  இந்த தேவதைகளின் உபாசனை செய்யும் பொது அந்த தேவதையை நமக்கு வேலைக்காரனாக நினைத்தல் கூடாது .நம் குடும்பத்தில் ஓர் அங்கம் என்றே எண்ண வேண்டும் .




No comments:

Post a Comment