மாந்திரீக ரகசியங்கள்
Thursday 30 July 2015
ஏவல் பில்லி சூன்ய வகைகள்
ஏவல் பில்லி சூன்ய வகைகள்
ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.
1. காலடி மண் :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.
2.சுடுகாட்டு சாம்பல் :
ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.
3.முட்டை :
ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.
4.எந்திர தகடு :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.
5.சுண்ணாம்பு :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.
6.எலுமிச்சை :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.
7. மந்திர பாவை (பொம்மை) :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.
1 comment:
Anonymous
19 February 2023 at 09:31
I want to talk to you. How to contact you .
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
I want to talk to you. How to contact you .
ReplyDelete